அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Rupa

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படும் என அம் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். ஹிந்தி மொழியில் பாடங்களை வரையறுக்க நான்கு பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் கூறுகையில், மத்திய அரசு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தொடர்ந்து இம் மாநிலத்திலும் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மத்திய பிரதேசத்தில் தற்போது செயல்பட்டு வரும் ஹிந்தி மருத்துவ படிப்பு பாடத்திட்டங்களை ஆராய்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும். அடுத்த ஆண்டு முதல் இம் மாநிலத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு கற்பிக்கப்படும் என்று கூறினார்.இதர மாநிலங்களில் மத்திய அரசின் இந்த ஹிந்தி திணிப்பிற்கு பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் பாஜக வை ஆதரிக்கும் சில மாநிலங்கள் மட்டும் தான் மத்திய அரசின், ஹிந்தி மொழியில் மருத்துவ படிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.