மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

0
124

தமிழகத்தில் எம்பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 2650 இடங்களும், என 6999 எம்பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் மருத்துவ படிப்பில் 1930 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு; அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14 ஆயிரத்து 777 பேர், என மொத்தம் 40 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிட உள்ளார்.இந்த விபரங்களை, https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ என்ற இணைய தளங்களில் பார்வையிடலாம்.

வரும் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு மற்றும் விளையாட்டுப் பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும; 28 , 29 தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நேரடியாக நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 30ஆம் தேதி முதல் இணைய வழியில் நடக்க உள்ளது.

Previous articleசைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் அதுல்யா ரவி! வைரலாகும் ஃபோட்டோ
Next articleதொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!