தொடங்கியது மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா! இவர்கலெல்லாம் செல்ல அனுமதி இல்லை!
கொரோனாவின் 2 வது அலை உருவாகிய நிலையிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மாதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அந்தவகையில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு இச் சித்திரை திருவிழா நடக்க அனமதி தந்துள்ளார்.இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
அப்போது அங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.மேலும் இத்திருவிழா 12 நாட்கள் நடைபெறும்.இந்த 12 நாட்களிலும் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் குதிரை,யானை,யாழி என அனைத்து வாகனங்களிலும் எழுந்தருளி மாசி வீதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் உலா வந்து காட்சி கொடுப்பர்.தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் சித்திரை உள்திருவிழாவாக நடத்த அனுமதி தந்துள்ளனர்.
எனவே இந்த வாகனம் உலாவானது காலை மற்றும் இரவு நேரங்களில் கோவிலுக்குள் ஆடி வீதியில் மட்டும் நடைபெறும்.அந்த நேரத்தில் பக்தர்கள் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.மேலும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அனுமதி தந்த நேரத்தில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும்.அதுமட்டுமின்றி கொரோனா பரவலில் இந்த திருவிழா நடப்பதால் கோவில் நிர்வாகிகளுக்கு பல கட்டுப்பாடுகள் போட்டுள்ளனர்.இந்த கோட்பாடுகளில் வருகிற 30-ம் தேதி வரை காலை 6 மணி முதல் 12.30 மணி வரையும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை நேரங்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
பொது தரிசனம் பெரும் நபர்கள் கிழக்கு கோபுரம் சன்னதி வழியாகவும்,சிறப்பு தரிசனம் பெரும் நபர்கள் தெற்கு சன்னதி வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர்.அந்தவகையில் மேற்கு மற்றும் வடக்கு கோபுர வழியாக எவ்வித பக்தர்களுக்கும் அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளனர்.அதே போல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கூறியுள்ளனர்.
வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே,கோவிலுக்குள் அனுமதிக்கபடுவர் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி 65 வயதுக்கு உட்பட்டவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,10வயதுக்கு உட்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என கூறியுள்ளனர்.பக்தர்கள் தேங்காய்,பழம் கொண்டு வருவதற்கும்,அர்ச்சனை செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்.பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு எந்த கோவிலில் எந்த இடத்திலும் உட்காரவும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.