மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

Photo of author

By Vinoth

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

நடிகை மீராமிதுன் கடந்த ஆண்டு பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

அந்த புகாரை பதிவு செய்த போலீஸார் மீராமிதுன் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடிய நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தனது ஆண் நண்பருடன் இருக்கும் போது கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியானார்.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டிய நாட்களில் ஆஜர் ஆகாததால் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் பிடிவாரண்ட் விடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில் இப்போது மறுபடியும் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கும் அவரது வழக்கறிஞருக்கும் மீண்டும் பிடிவாரண்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.