மீரா மிதுன் அவங்களோடதை சேல் பண்றாங்களாம்! வேணும்னா வாங்கிக்கறதாம்!

0
152

மிகவும் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் மீரா மிதுன். அவர் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அனைத்தையும் விற்க போகிறார்களாம் . வேண்டுமென்றால் வாங்கிக் கொள்கிறதாம் என்று பதிவு போட்டு இருக்கிறார்கள்.

 

இவர் 2019-ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

 

தமிழ் திரைப்பட நடிகை பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் 2019-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 – இல் போட்டியாளராக கலந்து கொள்ளவிருந்த நிலையில் சில காரணங்களால் அவர் விலகினார். பின் அவரது இடத்திற்கு இவரை அழைத்துள்ளது. இவர் பிக் பாஸ் இல்லத்தில் 15-வது போட்டியாளராக 2-வது நாளில் உள்நுழைந்து அங்கேயும் அபிராமி, சேரன் ஆகியோர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு 35 வது நாளிலேயே வெளியேறினார்.

 

பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பற்றி குறை கூறுவது தான் இவருடைய வேலையாக இருந்து வந்தது. சமீபத்தில் இவரது பாய்பிரண்டுடன் இவர் போடும் வீடியோக்கள் எல்லையை மீறி வருகிறது என்றே சொல்லலாம்.

தான் ஒரு மாடல் என்பதால் அவ்வப்போது போட்டோ ஷூட் கைகளை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். யாரேனும் அதேபோல் போட்டோ ஷூட்களை எடுத்தால், ஏன் என்னை பார்த்து அப்படியே காப்பி அடிக்கிறீர்கள் என்றும் சொல்லி வசை பாடுகிறார். எக்கச்சக்கமான புகார்கள் இவர்மீது வந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யா அவர்களைக் கூட இவர் தவறாக பேசி உள்ளார். அதனால் இவர் மீது தளபதி ரசிகர்கள் மிகவும் காண்டாக உள்ளனர்.

 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் ஐடியும் சேலுக்கு விடுவதாக அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.மீரா மிதுன் அவர்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி இரண்டையும் சேலுக்கு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் என்று அவரது மின்னஞ்சல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

 

Previous articleதடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!
Next article“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!!