
DMDK DMK: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஆனது இறுதி செய்யப்படுவது சற்று சந்தேகம்தான். தன் மகனுக்கு கட்டாயம் எம்பி பதவி கிடைத்துவிடும் என்றிருந்த கனவை அதிமுக நிறைவேற்றவில்லை. இதனால் பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவை எடுத்துள்ளதாக அரசல் புரசலான பேச்சு அடிபட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் விஜய பிரபாகரனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் தேசிய ஜனநாயகிய கூட்டணியில் தான் இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி வரப்போகும் மாநாட்டில் தான் தங்களது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை கூறுவோம் என்றும் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதனை எப்படியாவது சரிகட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக, அடுத்த ஆண்டு உங்களுக்கு எம்பி சீட் தருவதாக கூறியுள்ளது. ஆனால் இதனை தேமுதிக சிறிதும் கூட மதிக்கவில்லை. மேலும் இவர்களுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக தேமுதிகவின் ஆதரவானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது.
அந்த வகையில் உடல் நலம் தேர்ச்சி பெற்று தற்போது வீட்டிலிருக்கும் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது ரீதியாக பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நலம் விசாரிக்க தான் சென்றேன். மேலும் அவர் அண்ணன் முத்து இறந்த போதும் செல்லாததால் அது ரீதியாகவும் தனது இரங்கலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இவர்களின் இந்த சந்திப்பானது திமுக கூட்டணியில் வரும் நாட்களில் தேமுதிக அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.