அமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
166

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. அதோடு இயற்கை பொருட்களின் சான்றுகளுக்காக அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எம் எஸ் சி எஸ் அதன் அரசின் சான்றிதழை பெற்ற பிறகு அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும் ஆகவே கிடைக்கும் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கி எங்களுக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நாட்டில் ஆனந்த் சூரியனால் ஆரம்பிக்கப்பட்ட வெள்ளை புரட்சியில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கால் கூட்டமைப்பு அமுல். அதற்கடுத்து தான் மற்ற மாநிலங்களிலும் ஆவின், நந்தினி, விஜயா, மில்மா, மதர், டைரி போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டது. குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் அதன் தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காங்டாக்கில் நடைபெற்ற வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாட்டின் பேசிய அமித்ஷா, அடுத்த 5 வருடங்களில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இது உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல அண்டை நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பூடான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பாலை வழங்க நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. இதன் வழியில் உலக சந்தையை ஆராயவே அரசாங்கம் பல மாநில கூட்டுறவை நிறுவுகிறது. இது பிற்காலத்தில் ஏற்றுமதி நிறுவனமாக செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous article1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleதொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?