அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!!

0
113
Mesmerized by Ajith's beauty and fun life.. AK rooted for the actress before Shalini!!
Mesmerized by Ajith's beauty and fun life.. AK rooted for the actress before Shalini!!

அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அஜித்,1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.முதல் படமே தோல்வியை கண்டது.இருந்தும் கடின உழைப்பால் ஆசை,காதல் கோட்டை,வாலி போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆரம்ப காலகட்டத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த அஜித்தை காதல் மன்னன் என்று பெண் ரசிகைகள் அழைத்து வந்தனர்.அஜித் அவர்கள் காதல் கோட்டை,தொடரும் ஆகிய படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஹீராவை உருகி உருகி காதலித்தார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.ஹீராவும் அஜித்தை காதலித்திருக்கிறார்.ஆனால் ஹீராவின் அம்மாவின் எதிர்ப்பால் இவர்களின் காதல் கைகூடாமல் போனது.

அதன் பின்னர் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.ஆனால் ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன் அஜித் வேறொரு நடிகையுடன் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார் என்ற செய்தி 2000 ஆம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் வேறு யாரும் இல்லை அஜித்துடன் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தில் நடித்த தபு அவர்கள் தான்.இப்படத்தில் இவர்களின் காதல் காட்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இருவரும் எதார்த்தமாக காதலை கொட்டி இருப்பார்கள்.

தபுவை விடாமல் துரத்தி காதலிக்கும் அஜித்தை பார்த்து அவரின் பெண் ரசிகைகள் ஏங்கி போனார்கள்.தன்னை ராசி இல்லாத பெண் என்று நினைத்து அஜித்திடம் காதலை சொல்ல மறுக்கும் தபு படத்தின் கிளைமக்ஸில் அவரிடம் அழகாக லவ்வை வெளிப்படுத்தி இருப்பார்.இப்படி ஒரு காதல் நம் வாழ்க்கையில் வராத என்று ஏக்கங்கள் ஏற்படும் அளவிற்கு அவ்வளவு அழகாக அமைந்திருக்கும் அந்த காட்சி.

படத்தில் அஜித் தபுவின் அழகில் மயங்கி காதலிப்பது போன்று இருக்கும்.ஆனால் ரியல் லைஃபில் தபு அவர்கள் அஜித்தின் அழகில் மயங்கி உண்மையாகவே அவரை காதலிக்க தொடங்கினர்.அஜித்தும் தபுவை விரும்பிய நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்தனர் என்று பிரபல திரைவிமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.