VSK: தமிழக அரசானது சென்னை மாநகராட்சி மண்டலமான 5 மற்றும் 6 ஆகியவற்றை காண்ட்ராக்ட் படி தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அந்த மண்டலத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு நிரந்தர பணி நியமனம் ஆணை உள்ளிட்டவையும் தரும் படி கேட்டுக்கொண்டது.
இது ரீதியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையில் தொடர் 13 நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் எட்டு முறைக்கும் மேல் பேசி பார்த்தும் ஒத்துவரவில்லை. இதனால் தமிழக அரசின் ஊந்துதலால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. வழக்கின் உத்தரவின் பேரில், போராட்டக்காரர்களை அகற்றும் படி கூறியிருந்தனர்.
இதனால் நேற்று ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அங்கு போராடி வந்தவர்களை குண்டு கட்டாக தூக்கி அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இது ரீதியாக தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ரிப்பன் மாளிகையில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை கைது செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது.
அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று என எங்களது எழுச்சி தலைவரே கூறியுள்ளார். அவர்களோடு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக போலீசாரிடம் கேள்வி கேட்ட அனைவருக்கும் தங்களது கடுமையான தாக்குதலின் மூலம் பதிலளித்துள்ளனர். ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
நீதிமன்றம் இவர்களை அகற்றும்படி கூறிய உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது தான். அதுமட்டுமின்றி உடனடியாக இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாக கேட்டுக் கொண்டார்.