மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் சாதனை!

Photo of author

By CineDesk

முப்பத்தி ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை

ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்துவருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5 -2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43 வது நிமிடத்தில் பின் வாக்கில் உதைத்த பந்து கோலாக மாறியது அதை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர்.

இதேபோல் பார்சிலோனா முன்னணி வீரர் லயனல் மெஸ்ஸி 17, 41, 83வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தது இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இது அவர் எடுத்த 35 ஆவது ஹாட்ரிக் கோலாகும் இதன்மூலம் லா லீகா கால்பந்து வரலாற்றில் அதிக ஹாட்ரிக் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த சாதனை பட்டியலில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவரும் ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 34ஹாட்ரிக் உடன் அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.