இனி நரைமுடிக்கு டை அடிக்காதீங்க..!! ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

0
438
kaiyantharai benefits

kaiyantharai benefits: முடி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நம் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒருசிலருக்கு அவர்களின் மரபணு காரணமாக முடி வளர்ச்சி இருக்கும். ஆனால் பலருக்கும் ஒரு காலக்கட்டம் வரை நன்றாக வளர்ந்து வந்த முடி திடீரென்று வளர்ச்சி பாதிக்கப்பட்டு முழுவதும் கொட்டி விடுகிறது. பலருக்கும் இந்த இளநரை என்ற பிரச்சனையும் வரும். படிக்கும் சிறு குழந்தைகளுக்கு, கல்லூரி படிக்கும் பிள்ளைகளுக்கு என்று சத்துகுறைப்பாட்டால் அல்லது வேறு காரணங்களினாலும் இந்த இளநரை வரும்.

இளநரை மட்டும் இல்லாமல் பொதுவாக நரை முடி உள்ளவர்களும் இந்த கையாந்தரை என்னும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி வந்தால் தலைமுடிக்கு டை அடிக்க வேண்டியது இல்லை. மேலும் அடர்த்தியான முடியை மீண்டும் பெறுவதற்கும் இது உதவியாக உள்ளது. கையாந்தரையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் (karisalankanni benefits in tamil) பார்க்கலாம்.

கையாந்தரை

இது கரிசலாங்கண்ணி அல்லது கையாந்தரை என்று அழைக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணி (karisalankanni for hair growth in tamil) என்று பெயர் வருவதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கருமையான ஒரு நிறத்தை கொடுக்க கூடியதால் இதற்கு கரிலாங்கண்ணி என்று பெயர் வந்தது. இது ஒரு மூலிகைச் செடியாகும்

இந்த செடியில் உள்ள இலையை அல்லது பூவை கைகளால் நசுக்கி பார்த்தால் கை முழுவதும் அப்படியே கருமையாக மாறிவிடும். அவ்வளவு கருமை நிறம் கொண்டது இந்த கையாந்தரை செடி. இதில் மஞ்சள் கையாந்தரை மற்றும் வெள்ளை கையாந்தரை என்று இருவகை உண்டு. இரண்டும் முடியின் கருமையான வளர்ச்சிக்கு உதவுகிறது.

இது அதிக நீரோட்டமான இடங்களில் காணப்படும். ஈரப்பதம் எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு இந்த செடி நன்றாக வளரும்.

பயன்படுத்தும் முறைகள்

இந்த கரிசலாங்கண்ணி செடியை முழுவதுமாக பயன்படுத்தலாம். பூ, இலை, வேர் என அனைத்தும் பயன்படுத்தலாம். இந்த செடியை பறித்து வந்து நிழலில் உலர்த்த வேண்டும். மேலும் இதனுடன் மருதாணி, கருவேப்பிலை ஆகியவற்றையும் நிழலில் நன்றாக உலர்த்தி மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

அந்த பொடியை எடுத்து ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்த துணியில் கட்டியதை போட்டு ஒரு வாரம் வெயிலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். இப்போது இதன் நிறம் கருப்பு நிறத்தில் மாறிவிடும்.

இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி கருமையான நிறத்திற்கு மாறிவிடும்.

மேலும் இந்த கையாந்தரை இலையை அரைத்து சாறு எடுத்து, இதனுடன் நல்லெண்ணெயுடன் சேர்த்து வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

மேலும் படிக்க: இனி காலையில் இந்த blue tea குடியுங்கள்..!! உடல் எடை குறைய, முகம் பளபளக்க, சர்கரை நோய்.. அனைத்திற்கும் ஒரே தீர்வு