அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த 11 மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாம்

Photo of author

By Parthipan K

கோடை வெயில் தமிழகத்தை வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கூட வெப்பம் குறைவதில்லை.

இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி, சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும்.எனவே இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகும்” என்று தெரிவித்துள்ளது.