மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்!
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதினால் பணிகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக பணிக்கு குறித்து நேரத்தில் சென்று பெரிதளவில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை அடுத்த 75 நாட்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் மெட்ரோ ரயில் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்திற்குள் சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இது குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அதற்கான அறிக்கை அரசிடம் ஒப்புதலுக்காக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் பணிமனை கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
மேலும் விம்கோ நகர் பணிமனை தொழில்நுட்ப கோளாளர் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது விம்கோ நகர் பணிமனையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. அதனால் இப்பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது மீண்டும் பழுது ஏற்பட்டால் ரயிலை இடமாற்றி பழுதை சரி செய்ய ஒரு பிரதான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஒரு மணி நேரத்திற்கு நான்கு ரயிலை தூய்மைப்படுத்த முடியும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.