ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!
தொடர் மழையின் காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக அதிக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.
கபினி அணை, கிருஷ்ணராஜ ஆகிய அணைகளுக்கு வரும் நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருகின்றது. உபரி நீரும் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததால் 67.97 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 45,000 கன அடி நீர் வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 70.05 அடியாக இருக்கிறது.
பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 32.74 டி.எம்.சி. ஆக உள்ளது.