சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

Photo of author

By அசோக்

சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

அசோக்

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது.

சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” என்று அர்த்தம். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மாறியதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இப்போதும் சேலத்தில் சேலை நெய்யும் தொழில் என்பது பரவலாக காணப்படுகிறது.

salem
salem

சேலம் மாவட்டத்தில் இருந்தே நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் பிரிந்தது. அந்த மாவட்டங்கள் பிரிவதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஊர் சேலம் எனவும் சொல்லப்படுகிறது. இரும்பு தொழிற்சாலை, அரிசி மில்கள், ஜவ்வரி ஆலைகள், சுவையான உணவகங்கள் போன்றவற்றுக்கு சேலம் மாவட்டம் புகழ் பெற்றது. அதேபோல், சேலத்து மாம்பழம் என சொல்லுமளவுக்கு இங்கே மாம்பழமும் பிரபலமானது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் இன்று சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார். சட்டசபையில் பேசிய சதாசிவம் ‘சேலம் மாவட்டம் 11 தொகுதிகள் கொண்ட பெரிய மாவட்டம். எனவே, சேலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மேட்டூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டம் என மூன்றாக பிரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் ஆத்தூரை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.