இந்தியாவிலேயே இளம் வயதில் மேயராகும் பெண்!

Photo of author

By Sakthi

கேரள மாநில அரசியலில் பல ஆச்சர்யங்களின் ஆரம்பமாக இருப்பது ஆச்சரியம் கிடையாது. இந்த வரிசையில், மற்றுமொரு ஆச்சரியமாக 21 வயது இளம் பெண்ணிற்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் உடைய மேயர் என்ற பதவியை கொடுத்து ஒரு அரசியல் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கின்றது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆனது மொத்தம் இருக்கின்ற 100 இடங்களில் 52 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் வெற்றியை அடைந்தது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முடவன்முகள் வார்டில் இருந்து அந்த கட்சியின் வேட்பாளர் செல்வி. ஆரியா ராஜேந்திரன் வெற்றியடைந்தார். 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரனை திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக அந்த மாநகராட்சி உள்ளடக்கிய கட்சியின் மாவட்ட குழு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த தேர்விற்கு கட்சியின் மாநில குழுவும் ஒப்புதல் கொடுத்தால் இந்தியாவின் மிக இளம் வயது மேயராக ஆர்யா ராஜேந்திரன் இருப்பார்.

திருவனந்தபுரம், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி படித்துக்கொண்டிருக்கும் ஆர்யா ராஜேந்திரன், பாலசங்கம் என்ற குழந்தைகள் அமைப்பின் மாநில தலைவராகவும், அதோடு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மற்றும் திருவனந்தபுரம் கேசவதேவ் சாலை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஆர்யாவின் தந்தை எலெக்ட்ரிசியன் தொழிலை செய்து வருகின்றார்.அவருடைய தாயார் எல்ஐசி முகவர் வேலை பார்த்து வருகிறார்.

மேயர் பதவிக்காக தான் மாவட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டு இருப்பது பற்றி தி இந்து ஆங்கில பத்திரிகை இடம் தெரிவித்த ஆர்யா ராஜேந்திரன், இது குறித்து எனக்கு கட்சியிடமிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கட்சிதான் இதை முடிவு செய்யும் என்று தெரிவித்து இருக்கின்றார்.

மேயர் பதவிக்கு போட்டியாளர்களாக இருந்த இரு நபர்கள் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.