இன்றைய தலைமுறைக்கு சிறந்த படம் மெய்யழகன்!! அன்புமணி ராமதாஸ் பாராட்டு!!

Photo of author

By Vinoth

தற்போது நடிகர் கார்த்திக் நடித்த அவரத்தின் 27-வது படம் “மெய்யழகன்” கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, ராஜ்கிரண் பலர் நடித்துள்ளார். இந்த  படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. மேலும் நல்ல வசூல் செய்தது இந்த படம்.

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மெய்யழகன் படத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில், “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன், இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துகாட்டாக சிறந்த படம் என்றார்.

மேலும் அவர் தனது கிராமத்து நினைவுகளை மீண்டும் தனது கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இயக்குனர் சி.பிரேம்குமார் வாழ்த்தினர். மேலும் அதில் அற்புதமாக நடித்த கார்த்திக் மற்றும் அரவிந்த் சாமி நல்ல நடிப்பை வெளிபடுத்திவுள்ளனர். “உண்மையில் நல்ல திரைப்படம் பார்த்தது போல உணர்கிறேன்” என தெரிவித்தார்.