ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

Photo of author

By Rupa

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரை மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றால் அது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே, அந்த காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் நடித்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலம் மக்களிடத்தில் சேர்த்தவர் எம்ஜிஆர்.

எந்த கருத்தையும் வெளிப்படை தன்மையுடன் பேசுபவர் என்பதாலே தமிழ் திரையுலகில் இவர் கோபக்காரர் என்று பேசுபவர்கள் உண்டு. இவரோடு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ நடிகைகள் இருந்தனர். அந்த வரிசையில் லதா என்ற நடிகையை தன்னுடன் நடித்த பின்பு வேறு யாருடனும் நடிக்க கூடாது என தன்னிடமே வைத்துக் கொண்டார் எம்ஜிஆர்.

மேலும் அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை லதா மீது காதல் கொண்டுள்ளதாக எம்ஜிஆர்க்கு தகவல் கிடைக்கவே உடனடியாக லதாவை சிங்கப்பூரில் சகல வசதிகளுடன் தங்க வைத்து ரஜினியுடன் இணைந்து நடிக்காத வாறு பார்த்துக் கொண்டதாகவும் அதன் பின்  எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தான் அவர் தமிழ்நாடு வந்ததாகவும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல மற்றொரு நடிகையையும் வெளிநாடு அனுப்பிய சம்பவம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. எம்ஜிஆரை பொறுத்தவரை தன்னுடன் நடித்த நடிகைகள் வேறு யாருடனும் நடிக்க கூடாது எனவும் கூறுவாராம். இதனாலேயே படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் நடிகைகளை தன்னுடன் அழைத்து செல்வதையும் வழக்கமாக வைத்திருப்பாராம். நடிகை மஞ்சுளாவையும் எம்ஜிஆர் அப்படி வைத்திருந்த நிலையில் நடிகர் விஜயகுமார் காதலித்து எப்படியோ திருமணம் செய்து கொண்டார்.

எம்ஜிஆர் இது போன்ற செய்வதால் அப்போது இதனை யாரும் தவறு என்று கூட சொன்னது கிடையாது, நடிகர் ரஜினிக்காக நடிகை லதாவை சிங்கப்பூரில் சகல வசதிகளுடன் தங்க வைத்து பார்த்து கொண்டது பலருக்கும் இன்று வரை ஆச்சர்யமாக தான் இருந்து வருகிறது.