வராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!

0
229
#image_title

சிகிச்சை முடிந்ததும் எம்ஜிஆர் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. அனைவரும் காத்திருக்கின்றனர் தன் தலைவனை பார்க்க.

 

எப்படி வரப் போகிறார் ?ஆம்புலன்ஸில் வருவாரா நடந்து வருவாரா? அல்லது படுத்த படுக்கையாக வருவாரா? அல்லது நாற்காலியில் வருவாரா ?என்று கட்சிக்குள்ளேயே பயங்கரமாக குழப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அப்படி நாற்காலியில் வந்தால் அவரை விமானத்திலிருந்து அப்படியே தூக்கி கீழே இறக்க லிப்ட் கூட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

புரட்சித்தலைவர் வந்த விமானம் பல இறங்கியது எத்தனை மக்களும் அங்கு கூடின அத்தனை கட்சிகளும் அங்கு கூடினர் அவரது முகத்தை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கி தவம் கிடந்தனர்.

 

ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்.

 

விமானத்திலிருந்து வெளியே வந்ததும் தன் கையை உயர்த்தி கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். கை அசைத்ததும் அத்தனை கூட்டம் ஆர்ப்பரித்தது. பின் அவர் விருவிருவென படிகட்டுகளில் வேகமாக இறங்கி வந்தார். அவரது உடல் நிலையை கண்டு எதிரிகள் கூட அஞ்சின.

 

அப்போது எம்.ஜி.ஆருக்கு வலது கை செயலிழந்து இருந்தது. அவ்வப்போது சின்ன பேப்பர் ரோலை கையில் வைத்து அழுத்தியபடி அந்தக் கைக்கு வேலை கொடுக்க கொடுக்க மீண்டும் கைகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்தனர் மருத்துவர்கள்.

 

சின்ன பேப்பர் ரோல் எதுக்கு? நான் பெரிய பேப்பர் பந்தா உருட்டி அதிலேயே பயிற்சி எடுக்கிறேன் என்று சொல்லி, தினமும் பயிற்சி செய்வார். தொடர்ச்சியான பயிற்சியால் விரைவிலேயே அவரது கை செயல்படத் தொடங்கியது.

 

அந்த சமயத்தில் எம்ஜிஆர் அவர்கள் தனக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். கானு என்ற ஒரு டாக்டருக்கு தங்க யானை பொம்மை பரிசாக அளித்தார்.

 

விழாவின்போது, “இப்போது டாக்டர் கானு அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்” என்றதும், பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டர் எழுந்து நடந்து சென்று மேடை ஏறி எம்.ஜி.ஆரை நெருங்கும் வரை நல்ல எடை கொண்ட அந்த யானை சிலையை தன் வலது கையால் தூக்கிப் பிடித்தபடியே நின்றிருந்தார் அவர்.

 

அருகில் நின்றிருந்தவர்கள் பதறிப்போய் பிடிக்க முயல, யாரையும் நெருங்க அவர் அனுமதிக்கவில்லை. டாக்டர் கானு அருகே வந்ததும், “எப்படி…” என்பதைப் போல ஒரு சிரிப்பு சிரித்தபடி அந்தப் பரிசை அவர் கையில் கொடுத்தார்.

 

அதைப் பார்த்து வெளிநாட்டு டாக்டர்களே வியந்து போனார்கள். இது தான் புரட்சித் தலைவரின் மன திடம். எம்ஜிஆர் எது செய்தாலும் அதில் வேகமும் விவேகமும் இருக்கும் அவரது விடாமுயற்சிக்கு இதுவே ஒரு சாட்சி.

Previous articleIncome Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!
Next articleபாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!