எம்ஜிஆரே பயந்த இயக்குனர்! எம்ஜிஆர் செய்த தந்திரம் பலிக்காமல் போனது !

0
294
#image_title

எம்ஜிஆர் தனக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்வார். பிடிக்காதவர்களை சினிமாவில் இருந்து விட்டு விரட்டி விடுவார் என்று பலரும் பேசும் ஒரு பின்னணி. எம்ஜிஆர் ஒரு இயக்குனராகவும் இருந்ததால், எந்த வசனத்தை பேசினால் எப்படி இருக்கும். எப்படி நடித்தால் எப்படி இருக்கும். அதே போல் கேமராவில் கோணம் என தனக்கேற்றபடி அனைத்தையும் மாற்றி விடுவார்.

 

ஆனால் இந்த படத்தின் இவரது பாஷா பலிக்கவில்லை. அப்படி டயலாக்கை மாற்றி சொன்ன எம்ஜிஆர் இடம் முடியாது என்று சொன்ன இயக்குனரின் துணிச்சல் பற்றிய கதைதான் இது.

 

1956 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியான முழு நீல வண்ண திரைப்படம் என்று சொன்னால் அது அலிபாபாவும் 40 திருடர்களும். இந்த படத்தை டி ஆர் சுந்தரம் அவர்கள் இயக்கியிருப்பார்கள்.

 

இது ஹிந்தி படத்தின் ஒரு ரீமேக் ஆகும். எம்ஜிஆர் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை தந்ததே இந்த படம் என்று கூறலாம்.

 

இந்த படத்தின் ஒரே காட்சியில் “அல்லாஹ் மீது ஆணையாக “என்ற ஒரு வசனம் வரும்.

 

அப்பொழுது எம்ஜிஆர் அவர்கள் திமுக கட்சியில் இணைந்து இருந்த நேரம். இந்த வசனம் பேசினால் சரியாக இருக்காது என்று, நினைத்த எம் ஜி ஆர் கதை எழுதிய கதாசிரியரிடம் இந்த வசனத்தை மாற்றுங்கள் என்று சொல்லி உள்ளார்.

 

நீங்கள் சொல்வீர்கள் என்று நான் மாற்றுவேன். எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இயக்குனர் சொன்னால் மாற்றுகிறேன் என்று கதாசிரியர் சொல்லிவிடுகிறார்.

 

ஆனால் இயக்குனரோ டி ஆர் சுந்தரம். டி ஆர் சுந்தரம் அவர்கள் தனது தொழிலில் கரெக்டாக இருப்பார். யார் எது சொன்னாலும் அதை மாற்ற மாட்டார்.

 

அப்படி டி ஆர் சுந்தரம் அவர்களிடம் நேரடியாக இந்த வசனத்தை மாற்றுங்கள் என்று சொல்ல எம்ஜிஆருக்கு பயமாக இருந்ததாம்.

 

அதனால் காட்சியை எடுக்கும் பொழுது எம்ஜிஆர் “அல்லாஹ்வின் மீது ஆணையாக “என்பதற்கு பதில் “அம்மாவின் மீது ஆணையாக” என்ற வசனத்தை மாற்றி விடுகிறார்.

 

இதைக் கேட்டு டிஆர் சுந்தரம் அவர்கள் கட் கட் கட் எனச் சொல்லி இங்கு என்ன டயலாக் இருக்கிறதோ அதை மட்டும் சொல்லுங்கள் .மாற்றாதீர்கள் !என்று எம்ஜிஆர் இடம் சொல்லுகிறார்.

 

அப்பொழுது எதுவும் பேசாமல் எம்ஜிஆர் “அல்லாஹ் மீது ஆணையாக” என்ற வசனத்தை பேசி முடித்து கொடுத்துள்ளார்.

 

Previous article8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!
Next articleமுன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!