Cinema

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!

எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் அழைக்கலாம்.

 

எம்ஜிஆர் மலையாளத்தை சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்ததான் ஒரு தமிழன் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் அவர் புகழ் பெற்று அவருடைய கதைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.

 

அப்படி மலையாளத்திலிருந்து வந்தாலும் அனைத்து படங்களும் அவர் தமிழிலேயே எடுத்தார். அவரே இயக்கி, நடித்த படங்கள் கூட உண்டு.

 

அப்பொழுது ஒரே ஒரு படத்தில் மலையாள படத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார். அதில் அவரின் மலையாள உச்சரிப்பு சரியில்லை என இயக்குனர் சொல்லி, அது படம் வேண்டாம் என்று வந்திருக்கிறார் எம்ஜிஆர்.

 

 

இப்படத்தில் எம்ஜி ராமச்சந்திரன் , பிஎஸ் சரோஜா மற்றும் பிஎஸ் வீரப்பா ஆகியோர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் , ஞானமணி, கல்யாணம் ஆகியோர் இசையமைத்திருந்தனர். இது மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள பதிப்பிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

 

எம்ஜிஆர் மலையாளத்தில் நடித்த ஒரே ஒரு படம் அது ஜெனோவா. இதில் எம்ஜிஆர் ஒரு மன்னர். ஆனால் அதில் ஒரு வீரனாக ஜெனோவா என்ற ஒரு கிறிஸ்தவ இளவரசி அவருடன் பழகி திருமணம் நடக்கும். பின்னர் நண்பர் ஒரு செய்த துரோகத்தால் எப்படி கடைசியில் குடும்பத்துடன் இணைகிறார் என்பதுதான் படம்.

 

அவரின் மலையாளம் சரியில்லை என்றும், அவரின் உச்சரிப்பு தமிழ் போல் உள்ளது என்று இயக்குனர் சொல்ல, “ஆம் நான் ஒரு தமிழன் தான்” என்று சொல் இனிமேல் மலையாள படத்தில் நடிக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வெளியில் வந்தார்.