ADMK TVK: விஜய் திமுகவுக்கு எதிரான அரசியல் களத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறினார். ஆரம்ப கட்டத்தில் மறைமுகமாகவும் நேரடியாகவும் இதனை வரவேர்த்தனர். ஆனால் நாளடைவில் இதரக் கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சி மீது இந்த அழுத்தத்தை கொடுத்ததே தவிர விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இதனால் அவர் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடு பொடியானது.
இதனால் தனதுடைய முதல் ஆயுதமே தோல்வி சந்தித்தது. தற்போது தனது இரண்டாவது ஆயுதமாக அரசியல் களத்தில் மவுசு குறைந்த கட்சியின் வாக்குகளை கவர முன்வந்துள்ளார். அந்த வகையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டில் அதிமுகவை சுட்டிக்காட்டி பேசியதோடு தொண்டர்கள் நிலைமை என்னவென்றும் கேட்டிருந்தார். இவையனைத்தும் விஜய் பக்கம் திரும்ப வைக்கும் ஓர் வியூகம் தான்.
இதே போல விஜயகாந்த்து-க்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அவர்களது மகன்களுக்கு கிடைக்காது என்று அரசியல் களத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் அந்த வாக்கையும் கவர நினைக்கிறார். இது ரீதியாக பிரேமலதாவிடம் கேள்வி கேட்ககையில், எங்களது வாக்குகளை ஒருபோதும் விஜையால் எடுக்க முடியாது. எங்களுக்கென்று தனி கட்சி, வாரிசு எல்லாம் உள்ளது என கூறினார்.
ஆனால் அவர் அதிமுகவை டார்கெட் செய்வது நன்றாக அறிய முடிந்தது. ஏனென்றால் மாநாட்டில் எம்ஜிஆர்-ஐ குறித்தும் அவர் ஆரம்பித்த கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் பேசி உண்மை தன்மையை விவரித்து இருப்பதாக கூறுகின்றனர்.இதனால் அதன் தொண்டர்கள் அக்கட்சி ஆதரவு மக்கள் வாக்குகள் கிடைக்க அதிகளவு வாய்ப்பு உள்ளது.