எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

Photo of author

By CineDesk

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

CineDesk

MGR. Son banned from movie release !! Sasikumar fans upset !!

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்கைகளுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மத்திய அரசு ஆணையிட்டது. இதைத் தொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே வெளியிட்டனர்.

அந்த படங்கள் சில லட்சம் கூட வசூலிக்கததால் ஓரிரு வாரங்களிலேயே திரையரங்குககளில் இருந்து அந்த படங்களை நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரசின் 2 ஆம் அலை வேகமாக பரவத் தொடங்கி உள்ளதால். மத்திய அரசு மீண்டும் சில கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது.

அதில் திரையங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் அடங்கும். இதனால் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் சசிகுமார் நடிப்பில் உருவான எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஒத்திவைக்கப்படடுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் வெளியிட உள்ளனர். இந்த வகையில் அடுத்த மாதமும் இந்த 50 சதவீதக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் இந்த படங்களின் வெட்யீடும் தள்ளிவைக்கப்படலாம்  என தகவல் வந்துள்ளது.