அண்மைக் காலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, கலங்கபடுத்துவது இதுபோன்ற இழிசெயல்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது .
ஜாதி மதங்களை கடந்த சமயத்தின் அடையாளமாகவும் ஏழை மக்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் குடிகொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருக்கிறது.
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனதை காயப்படுத்தும் மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும்.
மொழியால் இனத்தால் மதத்தால் ஜாதியால் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் பெருமிதம் கொண்டு எழுகிறோம்.
இத்தகைய நமது ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்கக்கூடிய செயல்களை ஒருபோதும் தமிழினம் ஏற்காது. ஆகையால் புதுச்சேரி மண்ணில் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்களை சமூகத்தின் முன்பும் சட்டத்தின் முன்பு தோலுரித்துக் காட்டிட, விரைவான நடவடிக்கை மேற்கொள்ள புதுச்சேரி முதல்வரை கேட்டுக் கொள்வதாக தனது செய்தியில் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.