எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்!

Photo of author

By Gayathri

எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம்.எஸ்.வி. இவர் இவரது இசையில் வெளியான பாட்டை பிரமிப்பாகப் பார்த்த காலம் உண்டு. இவரது இசையை, கேட்பவர்களின் செவிகளுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நெருக்கமாகும். இவரது இசையில் கிறங்காத ரசிகர்களே கிடையாது.

இவரது இசையை கேட்டவர்களே முணுமுணுத்து பாட்டுக்குள் கலந்தார்கள். அந்தக்காலத்தில் எளிமையான, இனிமையான இசையை வழங்கியவர் எம்.எஸ்.வி. தமிழிசையின் மூன்றெழுத்து ராஜாங்கமாக எம்.எஸ்.வி. என்று இவரை ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.

ஆனால், ஒரு முறை அவருடைய மெட்டை எம்.ஜி.ஆர் குறை சொல்லிய சம்பவமும் நடந்ததாம்.

நேற்று… இன்று… நாளை படத்தை நடிகர் அசோகன் தயாரித்தார். இப்படத்தை பி.நீலகண்டன் இயக்கினார். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக மஞ்சுளா இப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இசையமைத்தார்.

அந்த காலத்தில் எல்லா பாடல்களும் இசையமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு செல்வார்களாம். அப்போது, எம்.எஸ்.வியிடம் ட்யூனை, நடிகர் அசோகன் வாங்கிக்கொண்டு, எம்.ஜி.ஆரிடம் சென்றாராம். ஆனால், எல்லா ட்யூனுமே நன்றாக இல்லை, ரொம்ப மோசமா இருக்கிறது என்று குறை சொன்னாராம் எம்ஜிஆர்.

தன் பாட்டு ட்யூன்கள் நிராகரிக்கப்பட்டதை கேட்ட விஸ்வநாதன் கடுப்பானாராம். உடனே அசோகனை அழைத்து இனி இப்படத்துக்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம். இந்த விஷயம் எம்ஜிஆர் காதுக்கு செல்ல, உடனே எம்.ஜி.ஆர் இருங்க நான் பேசுறேன் என்று கூறி  விஸ்வநாதனை நேரில் சந்தித்தாராம். அய்யோ.. விஸ்வா… நீ போட்ட ட்யூன் எல்லாமே சூப்பர்… உன்னை வைத்து சின்ன கேம் ஆடினேன். அதுபோக எனக்கு எனக்கு கால்ஷூட் பிரச்சினை இருந்தது. அதை சமாளிக்கத்தான் நான் இப்படி பேசினேன். இப்போ கால்ஷீட் பிரச்னை இல்லை என்று கூறி சிரித்தாராம். உடனே விஸ்வநாதன் அட போகங்கப்பா… இருந்தாலும் இவ்வளவு குறும்பு  உங்களுக்கு ஆகாது என்று கூறினாராம்.