எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (வயது 75). அண்மையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவரின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து வென்ட்டிலேட்டர் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், வென்டிலேட்டர் பொருத்த ஏற்பாடு செய்வதற்குள் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், எம்.ஜி.சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.