பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பு?- மத்திய அரசு விளக்கம்

Photo of author

By Parthipan K

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வரும் ஜுன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10வது மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், இது வரை மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கவில்லை என்றும். நடப்பு கல்வியாண்டில் எப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்பதை பற்றியும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

#FactCheck
Claim: MHA permits all States to open schools.

Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020