282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான மைக்கேல் கிளார்க் தனது மனைவி கைலியை விவாகரத்து செய்ய 192 கோடியை ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரான மைக்கேல் கிளார்க் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். அப்போது அடிக்கடி ஏற்படும் காயங்களாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடவுமே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2012 ஆம் ஆண்டு கைலி என்பவரை மணந்தார். அவர்களுக்கு 4 வயதான கெல்ஸி லீ என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக இருவரும் தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ‘இருவரும் மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் எதிர்காலத்துக்காக பொறுப்பேற்றுள்ளோம்’ எனக் கூறியுள்ளனர்.
விவாகரத்துக்குப் பிறகு மகள் கெல்ஸி லீ தந்தை கிளார்க்குடன் இருப்பார் எனத் தெரிகிறது. இந்த விவாகரத்துக்காக கிளார்க் தனது மனைவிக்கு 40 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 282 கோடி ரூபாய் ஆகும். இந்த விலையுயர்ந்த விவாகரத்தை ஆஸ்திரேலிய மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதுவரை வர் 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள கிளார்க் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.