Milagai Poondu Plant: உடலில் உள்ள காயம் தழும்பு மறைய இந்த மிளகாய் பூண்டு செடியை பயன்படுத்துங்க..!!

Photo of author

By Priya

Milagai Poondu Plant: இந்த மிளகாய் பூண்டு செடியை 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் கிராமங்களில் வளர்ந்தவர்கள் இந்த செடியை பார்த்திருப்பார்கள். இந்த மிளகாய் பூண்டு செடியின் மருத்துவ பயன்கள் தெரியாமல் ஏதோ களைச்செடிகள் என்று நாம் அனைவரும் நினைத்து அதனை நண்பர்களுடன் விளையாடும் போது பறித்து விளையாடி இருப்போம். இந்த செடியின் (milagai poondu sedi) காம்பை
கிள்ளும் போது இதில் இருந்து பால் போன்று ஒன்று வரும் அதை ஊக்கின் பின் பகுதியில் வைத்து ஊதினால் பப்புள்ஸ் போன்று வரும்.

இவ்வாறு பல செடிகளின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியாமல் விளையாட்டு செடிகளாகவே அதனை வைத்து விளையாடிவிட்டு தற்போது இவைகளின் மருத்துவ பயன்கள் பற்றி நமக்கு தெரிய வரும் போது இந்த செடிகளையா நாம் விளையாட்டாக பயன்படுத்தினோம் என்று நினைக்க (milagai poondu sedi maruthuva payangal) தோன்றுகிறது.

மிளகாய் பூண்டு

இந்த செடியை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கூறுவார்கள். அந்த வகையில் இந்த செடியை காக்கா பூண்டு, எளிய ஆமணக்கு போன்ற பெயர்களால் இதனை அழைப்பார்கள். இதனை ஆங்கிலத்தில் (milagai poondu plant in English)
croton sparsiflorus என்று கூறுவார்கள். இந்த செடியில் என்னற்ற வகையான மருத்துவ பயன்களை கொண்டது. இந்த செடி வறண்ட, ஈரப்பதம் உள்ள இடங்களில் வளரும். பெரும்பாலான இடங்களில் இந்த செடிகள் ( Milagai Poondu Mooligai Chedi) காணப்படுகிறது.

குழந்தைகள் கீழே விழுந்து விட்டார்கள் என்றால் காலில், கைகளில் ஏற்படும்  காயத்திற்கு சிறந்த மருந்தாக இது அமைகிறது. இந்த செடியை கிள்ளி அதில் வரும் பால் மருந்தை எடுத்து காயத்தில் வைத்தால் சற்று எரிச்சல் இருக்கும். ஆனால் காயம், புண் உடனே சரியாகிவிடும்.

இந்த செடியின் இலையை கூட்டு சமைத்து சாப்பிட்டு  வர மலச்சிக்கல், செரிமான பிரச்சனை தீரும்.

மேலும் உடலில் ஏற்படும் அரிப்பு, சொரியாஸ் போன்ற நோய்களுக்கு இந்த செடியை அரைத்து பூசி வர குணமாகிவிடும்.

இந்த இலையை அரைத்து வலி உள்ள இடத்தில் பத்து போட்டு வர வலி குணமாகிவிடும். முக்கியமாக இடுப்புவலி, மூட்டுவலி உள்ள இடங்களில் பத்து போட்டு வரலாம்.

(croton sparsiflorus medicinal uses) பக்கவாதம் வருவதை தடுக்கிறது.

இந்த இலைகளை பறித்து வந்து காலை, மாலை என்று இருவேளை கசாயம் வைத்து குடித்து வர கை, கால்களில் நெறிகட்டி இருந்தால் உடனே சரியாகிவிடும்.

மேலும் படிக்க: இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!