பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்தப்பட்டதால் பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர்.அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ 60 ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதனை தொடர்ந்து ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது.இதனை தொடர்ந்து அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதங்களில் அமுல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்பட்டது.
அதுமட்டுமின்றி திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்தது.அந்த வகையில் பால் விலை லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்பட்டதை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை அனைத்தும் உயர்த்தப்பட்டது.தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டது.அந்த வகையில் பால் கொள்முதல் விலை ரூ 32 இருந்து 35 ஆக உயர்த்தினார்.மேலும் எருமைப்பால் விலையை 41 ல்லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் தனியார் பால் நிறுவனமான மதர் டேரி தனது பால் விலையை உயர்த்தியுள்ளது.இந்த விலை நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.அந்தவகையில் 64 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொழுப்புச் சத்து நிறைந்த பால் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தியதே இதற்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.