பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

Photo of author

By Vijay

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

Vijay

Updated on:

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை! 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றிற்கு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ஒரு கோடியே 5 லட்சம் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்கள் சேவைக்காக அரசு அதை தொடர்ந்து வருகிறது.
பசும்பால் லிட்டருக்கு 35-ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 44 வீதம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்து உள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும்.‌
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தற்போது பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வழக்கம்போல் தொடர்ந்து பால் வழங்கி வருகிறார்கள். இங்கே உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கால்நடைகளுக்கு அரிய வகை நோய்கள் பல மாநிலங்களில் பரவி வருவதாகவும், அதை தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க தொடர் நடவடிக்கையை எடுத்து வருவதாக கால்நடை துறை அமைச்சர் நாசர் நேற்று சட்டமன்றத்தில் கேள்வி  நேரத்தில் பதிலளித்து பேசினார். அமைச்சரின் இந்த பதில் சட்டமன்ற அவை குறிப்பில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.