இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

Photo of author

By Rupa

இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

Rupa

Milk supply stop in this district! A suffering public?

இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி கலந்து கொண்டார். மேலும் இவருடன் முன்னாள் எம்பி லிங்கம் என்பவரும் கலந்து கொண்டு கோஷமிட்டார். இவர்கள் தற்பொழுது பால் கொள்முதல் செய்யப்படும் விலையில் லிட்டருக்கு ரூ.பத்து ரூபாய் உயர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அத்தோடு கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதில் 50 சதவீதம் மானிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும், பால்  கொள்முதல் செய்யப்படும் இடத்தில் அதனின் அளவு மற்றும் தரம் குறித்து ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அவ்வாறு பாலின் தரம் பார்க்கும் ஊழியர்களை கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

ஆனால் போராட்டம் நடத்தியும் இவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றப்படுவதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.அந்த வகையில், இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பால் சப்ளை செய்வதை நிறுத்துவதாக கூறியுள்ளனர். இது குறித்து அறிவிப்பை பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். பால் உற்பத்தி நிறுத்தப்பட்டால் விருதுநகர் மாவட்டம் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாக நேரிடும்.