பால் மற்றும் பெட்ரோல் பங்குகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0
211

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பால் விற்பனையை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படும் என்று பால் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அதிகாலை 3 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து மனு அளித்துள்ளது. அந்த மனுவில் பெட்ரோல் வினியோக நேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும் அரசு ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமலுக்கு வந்தால் பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கலாம் என்று பெட்ரோல் விற்பனை யாளர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

Previous articleஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?
Next articleஅத்தியாவசிய பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கிடைக்கும் : வெளியான அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here