உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் சோரஸ் என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது ஹங்கேரியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறியவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது ’இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தை மதிக்காமல் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்து வருவதாகவும் குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருவதாகவும் கடுமையாக கண்டனம் செய்தார்.
அதேபோல் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க அதிபர் டிரம்ப் தான் காரணம் என்றும் டிரம்ப் அரசியல் சாசனத்தை மதிக்காமல் தன்னைச் சுற்றித்தான் உலகமே சுற்றுகிறது என்று நினைப்பதால் தான் அமெரிக்கா தற்போது பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது என்றும், அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளதவர் என்பதும் அவர் இதுவரை நன்கொடையாக மட்டும் 32 மில்லியன் டாலர் கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.