கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பல குடும்பங்கள் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கிக் கொண்டே வருகின்றனர்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய செல்வந்தர்கள் மாறியுள்ளனர். அந்த வகையில் கடந்த 2018 ஆண்டு நூறு கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டி, வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை வெறும் 77 ஆக இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது என்று கூறினார். அந்த வகையில் கடந்த 2020 நிதி ஆண்டில் இது 141 ஆகவும் 2021 ஆம் நிதியாண்டில் 136 யாகவும் இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த தகவல்களின்படி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதெல்லாம் சரியாக வரி கட்டினால் தான் தெரியும். அதன் அடிப்படையிலேயே நிதி அமைச்சர் இந்த விளக்கங்களை கூறி உள்ளார். அதனால்தான் தவறாமால் வரி கட்டுங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகிறது.