பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

0
117
One day school the next day holiday! This is the next update of the Department of Education!
One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதனின் வலுவான ஆதிக்கத்தை நாட்டி வருகிறது.அந்தவகையில் சீனா நாட்டில் இந்த தொற்று உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதிகளவு தாக்கம் காணப்பட்டது.அந்தவகையில் நமது இந்தியாவில் தற்போது வரை இத்தொற்று ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக பரவ நேர்ந்தால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அவ்வாறு 6 மாதக்காலம் ஊரடங்கையும் அடுத்த ஆறு மாதக்காலம் தளர்வுகளற்ற ஊரடங்கையும் அரசாங்கம் அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்திய போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறந்த போது பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது.முதலில் குறைந்து எண்ணிக்கையில் தொற்று காணப்பட்டாலும் நாளடைவில் ஆசிரியர்கள் முதல் பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து தமிழக அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் திட்டத்தை கைவிட்டுவிட்டது.அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே தேர்த்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி ஆள் பாஸ் செய்தனர்.தற்போது இரண்டு அலைகளை கடந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.இதேபோல நடந்து கொண்டிருந்தாள் மாணவர்களுக்கு பாடங்களே மறக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என பெற்றோர்கள் வருத்தமுற்று வருகின்றனர்.அவ்வாறு அவர்கள் கூறி வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்டும் என கூறியிருந்தார்.அதேபோல இதன் சம்பதாமாக முதல்வருடன் ஆலோசனை நடந்த பிறகு அவரே இதன் அதிகாரப்பூர்வ அர்விப்பை வெளியிடுவார் என கூறியிருந்தார்.

தற்பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பல கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.தற்போது நமது தமிழகத்தில் பள்ளிகளில் சுழற்சி முறையில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.அதனடிப்படையில் ஓர் வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை வரவழைக்க திட்டமிட்டு வருவதாக கூறினார்.மேற்கொண்டு அவர்களுக்கு தொற்று பரவமாலிருக்க முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறினார்.