மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!

Photo of author

By Parthipan K

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!

Parthipan K

Mini load van overturned and accident! 36 people were injured and one person was killed!

மினி லோடு வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து! 36 பேர் படுகாயம் ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியைச் சேர்ந்தவர்கள்  30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12  மணியளவில் மினி லோடு வேனில் ஏகால் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த  வேனை அருந்தங்குடியை சேர்ந்த வடிவேல் என்பவர் இயக்கினார்.

அந்த வேன் . பொன்னியந்தல் ரோடு அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் அருதங்குடி ஹரிஹரன் மனைவி பச்சையம்மாள், டிரைவர் வடிவேல், தைலம்மாள்,  உண்ணாமலை,  பரிமளா,வீரம்மாள், ரத்தனாம்பாள்,  வடிவேல் என  36 உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் மேலும்  இந்த விபத்து குறித்து திருக்கோவிலுார் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் பச்சையம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.