இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்!

Photo of author

By Parthipan K

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்!

அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறிப்பிடப்பட்ட வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்து பலன் அடைய முடியும்.அதனால்தான் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வரம்பு ரூ இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனம் நிரந்தர தொகைக்கான இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே அடைய உள்ளதால் முன்னதாக முதலீடு செய்தவர்களுக்கு வட்டித் தொகை கட்டாயம் அளிக்க வேண்டும்.டான்ஜெட்கோ ,டான்டிரான்ஸ்கோ ஆகியவற்றுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் கடனுதவி பெற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்படுகின்றது.

மேலும் நிரந்தர வைப்புத் தொகைக்கு கால அளவுக்கு ஏற்ப 58 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வட்டி தொகையை அளித்துள்ளது.இந்த விகிதமானது கால அளவுக்கு ஏற்ப தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு  மின்விசை நிதி நிறுவனம் மொத்தம் வைப்புத்தொகை ரூ 38,891 கோடியாக உள்ளது.இந்த நிறுவனத்தில் மொத்தம் 11லட்சத்து 71,850 பேர் முதலீடு செய்துள்ளனர். இணையவழியில் 27 லட்சத்து 3,702 பேர் நிதி பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.