மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி… 

Photo of author

By Sakthi

 

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி…

 

காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியு.ள்ளது.