அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு!!

0
42

 

அதெல்லாம் உண்மை இல்லை… இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து விராட் கோலி பதிவு…

 

இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று கிரிக்கெட்டர் விராட் கோலி அவர்கள் பதிவிட்டுள்ளார்.

 

மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் சுமார் 235 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமாக உள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட பயனர்களுக்கு அதாவது வருமானம் ஈட்டுவதற்கு தகுதியான நபர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கி வருகின்றது.

 

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம் ஈட்டும் முதல் 100 பேர்களின் விவரத்தை பிரிட்டனின் ஹூப்பர் ஹெச்.கியூ வெளியிட்டது. ‘இன்ஸ்டாகிராம் ரிச்ச் லிஸ்ட் 2023’ என்ற பெயரில் வெளியான இந்த தகவல் குறிப்பில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் மற்றொரு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி அவர்கள் உள்ளார்.

 

உலக அளவில் இன்ஸ்டாகிராம் விளம்பரப் பதிவுகள் மூலமாக மூலமாக வருமானம் ஈட்டும் 100 பேர்கள் கொண்ட பட்டியிலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 14வது இடத்திலும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளார். இதையடுத்து இந்த தகவல் அனைத்தும் பொய்யானது என்று விராட் கோலி அவர்கள் பதிவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக விராட் கோலி எக்ஸ் பக்கத்தில் “என்னுடைய இந்த வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். சமூக வலைதளங்கள் மூலமாக நான் ஈட்டும் வருமானம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. அது முழுக்க முழுக்க பொய்யானது” என்று பதிவிட்டுள்ளார்.