அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி! டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 

0
357

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி! டெங்கு காய்ச்சல் பாதிப்பு! 

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை நடந்த முதல்அமைச்சரின் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு மேலும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதை அடுத்து சிகி்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர் இரண்டு நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் ஒரு சில தினங்களுக்கு மருத்துவமனையில் தங்கி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதிக்குள் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!
Next articleமருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here