DMK: அரசு மகளிர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு பேசியதற்கு எதிராக கண்டனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் படிப்பை தாண்டி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறையானது சொற்பொழிவாளர்களை அழைத்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு கலந்து கொண்டார். இவர் மாணவர்களிடம் இந்துவத்துவத்தை மற்றும் பகுத்தறிவை தவிர்க்கும் வகையில் பேசியுள்ளார்.
ஏன் மாணவிகள் அழகாக இல்லை, இதற்கு முக்கிய காரணம் முன் ஜென்மம் செய்த பாவம் தான் என தொடங்கி ஆசிரியர்கள் எல்லாம் தகுதியானவர்களே இல்லை என்பதை குறிக்கும் வகையில் முதன்மை கல்வி அதிகாரிகள் தான் பெரியவர்கள் என கூறியுள்ளார். இவர் மாணவர்களிடம் பேசிய வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது. பகுத்தறிவையும் அறிவு சார்ந்த தகவல்களையும் கற்று வரும் மாணவர்களிடம் இவ்வாறு தவறான தகவலை புகுத்தலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்வாறு நிகழ்ச்சி அமைக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்த ஹாஸ் டாக்கானனது தற்பொழுது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.மேலும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இனி இவ்வாறான தகவல்கள் நடைபெறாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சொற்பொழிவாளருக்கு எதிராக பாமக உள்ளிட்ட பல கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.