அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்.. தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு!!

Photo of author

By Rupa

 

தமிழர்களின் கட்டிடக்கலை அனைத்தும் பறைசாற்றும் வகையில் தான் இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில். இதனை இராஜராஜன் சோழன் அவரது ஆட்சியில் கட்டினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் இந்த கோவில் பற்றிய ரகசியம் ஒன்று உள்ளது. அரசியல் மற்றும் பிரபலமானவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களது உயிரானது பறிபோகிவிடும் என்ற மூட நம்பிக்கையானது தற்பொழுது வரை அவர்கள் மத்தியில் உள்ளது.

அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதி என ஆரம்பித்து இந்திரா காந்தி வரை அனைவரும் இந்த கோவிலுக்குள் சென்றுள்ளனர். அதன் பின்பு தான் இவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த கோவிலுக்குள் அரசியல்வாதிகள் செல்வது என்றாலே அவர்களுக்குள் ஒரு பெரிய அச்சம் உள்ளது. அப்படி இருக்கையில் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள பூங்காவை திறந்து வைப்பதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் கே என் நேரு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

மேற்கொண்டு இவர்களுடன் எம் எல் ஏ சந்திரசேகரனும் கலந்து கொண்டார். இந்தப் பூங்காவானது தற்பொழுது நீச்சல் குளம், ஊஞ்சல், நடைமேடை என குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஏழு கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பார்வையிட்ட பொழுது, அமைச்சர் கே என் நேரு தஞ்சை பெரிய கோவிலை பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷிடம், உள்ளே சென்றாள் கதை முடிந்து விடும் என்று கூறியுள்ளார். கேன் நேரு அவ்வாறு சொன்னதும் அன்பில் மகேஷ் சிரித்துக் கொண்டு பதில் ஏதும் கூறாமல் சென்றார்.

ஆனால் அங்கிருந்த எம்எல்ஏ சந்திரசேகரன் என்னை பலமுறை இந்த கோவிலுக்குள் செல்ல கூப்பிட்டுள்ளார்கள், ஆனால் நான் ஒருபோதும் சென்றதில்லை என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலேயே கூறினார். அதுமட்டுமின்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பத்திரிக்கையில் எழுதிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். இது தற்பொழுது பத்திரிகை ஊடகம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பேசும் பொருளாகிவிட்டது. மேலும் இது குறித்த ரகசிய தகவல்களும் வெளியாகியுள்ளது. தஞ்சை பெரிய கோவிலுக்குள் சென்றாலே பிரபலமானவர்கள் அரசியல்வாதிகள் என அனைவரும் தங்களது பதவி அல்லது உயிரை இழக்க நேரிடுமாம்.இதனால்தான் பல மூத்த நிர்வாகிகள் இந்த கோவிலுக்குள் செல்வதில்லை என கூறுகின்றனர்.