நோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

Photo of author

By Sakthi

நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வினியோகம் செய்யப்படுகிறதா என்று மாநில உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து இருக்கின்றார் .இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேக வரிசை உண்டாக்கி தரவும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் வரும் 14-ஆம் தேதி வரையில் நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் இரண்டாவது தவணை நோய்த்தொற்று நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் சக்கரபாணி.

அதோடு பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்கள் சரியான முறையில் சென்றடைகிறதா என ஆய்வு நடத்தி வருவதாகவும், உளவுத்துறையின் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால் எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். நிவாரண தொகை முதல் தவணை வழங்கியபோது நிவாரண தொகையை பெற இயலாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு முன்னரே அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.