ரேஷன் கடைகள் பிரிப்பு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! எதற்காக தெரியுமா!

Photo of author

By Sakthi

சுமார் ஆயிரம் ரேஷன் அட்டைகள் மேல் இருக்கின்ற நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும் என மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கின்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற நியாயவிலை கடைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்றையதினம் ஆய்வு மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு மேல் இருக்கின்ற நியாயவிலை கடைகள் 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன. அந்த கடைகள் உடனடியாக பிரிக்கப்பட்டு பகுதிநேர கடைகளாக அமைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

தமிழகத்தின் புதிய நியாய விலை கடை அட்டை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு 15 தினங்களுக்குள் நியாய விலை கடை அட்டை வழங்கப்படும். நியாயவிலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு போடப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒரு மாதத்திற்கு 10 நியாய விலை கடைகளில், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முப்பது நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நியாயவிலை கடைகளுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித் தரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த கட்டணங்கள் எழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடல் மூலமாக நியாய விலை கடையில் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கு கடலோர காவல் படையுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமாக நெல்லை மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதியில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்களை இன்றைய தினம் நடத்த வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்பாடு செய்து இருக்கிறார். இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தில் இருக்கின்ற எல்லா தொகுதிகளிலும் நடத்த ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.