திரௌபதி படத்தை பார்த்து பாராட்டிய பிரபல அமைச்சர் – இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

0
150

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்தை பார்த்து இயக்குனரையும் படக்குழுவினரும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியதாவது;

‘இன்று #திரெளபதி படம் பார்த்தேன்.

பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்’ என்று அதில் கூறியுள்ளார்.

இதனால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.


https://twitter.com/RajBhalajioffl/status/1237439099650236416?s=20

Previous articleபணத்தை தூக்கி போடுங்க பண்ட மாற்று முறைக்கு வாங்க : கலாய்க்கும் நெட்டிசன்கள்
Next articleகுறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிப்பதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!