அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

Photo of author

By Parthipan K

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறதாம். 

அவரின் உடல்நிலையில் இன்று எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை மூலம் கூறியுள்ளனர். அவரை நேரில் வந்து சந்தித்து, அவரின் உடல்நிலை பற்றி பல முக்கிய அமைச்சர்கள் கேட்டு அறிந்து வருகின்றனர்.