கல்லூரி மாணவிகள் பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு! வழுக்கும் கண்டனம்!
வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் “செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் பெற்றோர்கள் அவர்களது பெண்பிள்ளைகளை அரசு கல்லூரிகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறோம் அதை மாணவிகள் இஷ்டம் போல் செலவு செய்துகொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய்யை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அம்மாவிடம் போய் பஸ்க்கு கேட்க தேவையில்லை, நீ பசங்களோடு ஜாலியாக சினிமாக்கு போனால் அங்கே சென்று பசங்ககிட்ட பணம் கேட்ட தேவையில்லை, மேலும் ஒரு செல்போன் வாங்கிக்கொள்,வீட்டுக்கு தெரியாமல் நைசாக பேசு, என்ன வேண்டுமானலும் பண்ணு, அதுக்கும் ஒரு 1000 கொடுக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் திமுக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.