அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Photo of author

By Parthipan K

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவரது கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.