தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Photo of author

By Anand

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Anand

Sekar Babu DMK

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசிய இடங்களில் அடுத்து நம்ம ஆட்சி தான் அதனால் தைரியமாக நீங்கள் வங்கிக்கு சென்று நகைக்கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். இவ்வாறு பொதுமக்களுக்கு ஆசையை தூண்டி விட்டு தற்போது தகுதியான மக்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் புதியதாக பதவியேற்றுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் பயிர்க்கடனில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் அதுபோன்ற முறைகேடுகள் நகைக்கடன் தள்ளுபடியிலும் நடைபெற்றிருப்பதாக கூறினார். இதனையடுத்து தான் தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கூறியதாவது, யார் முறைகேடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக ஆட்சியில் குவாரி, தரிசு நிலங்களுக்கு கூட பயிர்க்கடன் தந்து மோசடி செய்துள்ளனர்.

மேலும் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் தருவதற்கு பதிலாக ரூ.80 ஆயிரம் வரை பயிர்க்கடன் தந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று லட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர். ஒரு அளவு இல்லாமல் அவர்களின் விருப்பப்படி கடன் வழங்கி அதிமுக ஆட்சியில் மோசடி செய்துள்ளனர் என அவர் அப்போது தெரிவித்துள்ளார்.